Saturday, December 3, 2011

 இன்றைக்கு எனது கேள்வி.

உலகையும் உயிரினத்தையும் படைத்தவன் இறைவன் என்கிறார்கள்
ஆன்மீகவாதிகள்.  இல்லை  இறைவன் என்பவன் இல்லை என்கிறார்கள்
நாத்திகவாதிகள்.  அவர்கள் தஙகளை பகுத்தறிவாளிகள் என்றும் கூறிக்
கொள்கிறார்கள்.
இதில்  எது உண்மை.?  நாத்திகவாதிதான் பகுத்தறிவாளியா?

ஆன்மீகவாதிகளிலும் பகுத்தறிவாளிகள் இல்லையா?
ஆன்மீகவாதிகளில் பழய மூடப்பழக்கஙகளையும் மூடநம்பிக்கைகளையும்
உன்னிப்பாகப்பார்த்து,  அதில் எது தேவை என்பதை பகுத்து அறிபவனே
ஆன்மீகத்தில் பகுத்தறிவாளி ஆவான்.

எது சரி?    விமர்சனம் தேவை.

Thursday, December 1, 2011

டெஸ்டிங்


நான் கவிமாமணி பாரதி எழிலவன் எழுதுகிறேன்.  இந்த இடுகையைத் தொடங்கிய நீண்ட இடைவெளிக்குப்பின் இப்பொழுதுதான் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நேரம்கிடைத்தது.  இந்த இடுக்கையை படிப்பவர்கள், தங்களது எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

நான் ஒரு படைப்பாளி, கடவுளுக்குச் சம்மானவன்.  நான் அழிந்தாலும் என்
எழுத்துக்களும் எண்ணஙகளும் பதிவுக்குப்பின் அழிபடாதவை. நான் தமிழகத்
திலேயே முதன்மையான, வலிமை வாய்ந்த, கவிஞர்களை உருவாக்கி, ஊக்கி
பயன்பெறவைக்கும் பல்கலைக் கழகமான பாரதி கலைக்கழகதின் முக்கியமான பலராலும் பாராட்டப்பட்த்தக்க கவிஞ்ர்களில், அதாவது அந்த கழகம் உறுவாக்கிய் கவிமாமணிகளில் ஒருவனாகவும் நான் திகழ்கிறேன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.

தினமும் இந்த இடுக்கையில் ஏதாவது ஒரு பொருளைப் பற்றி எனது எண்ணத்தை வெளியிடுவேன்.  அவை அனைத்தும் எனது சொந்த கருத்தே
தவிர, வேறு எவரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல என்பதை இவண் நான்
தெரிவித்தே ஆகவேண்டும்.

நான் இது வரையில் எழில்மலர்கள், எழில் ஓவியங்கள் என்னும் இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறேன்..  நான் எழுதிய சமூக நாவல்
பாசமலர்கள்,  சிறுகதைத் தொகுப்பான கவரிமான் அச்சில் புத்தகமாக வெளிவர இருக்கிறது.  மேலும் உயிரில் கலந்த உறவு, கடமை கண்ணியம், காதல் என்ற சமூக நாவல்களும் கணினி உறுப்பெற்று தயார் நிலையில் உள்ளது.

இத்துடன் என்னுடைய அறிமுகத்தை நிறைவு செய்கிறேன்.

            இந்த ப்ரபஞ்சத்தை உறுவாக்கிய இறைவன் ஒரு சகலகலா வல்லவன்
எல்லா உயிரினங்களையும் படைத்த ஒப்பற்ற தலைவன். என்றும் எல்லாமு
மாக இருப்பவன்.  அவன் படைத்த எல்லா உயிர்களுக்கும் அவர்களது வாழ்வி
யலை விதித்து வைத்தவன். அப்படிப்பட்ட இறைவன் ஒருவனே என்றாலமு
நமக்கு ஆறாவது அறிவைப் படைத்ததினால், நாம் அவனுக்கு பல்வேறு உறு
வங்களைக் கொடுத்து வழிபட்டு வருகிறோம்.  இதனால் என்ன பலன்களை
நாம் அனுபவித்து வருகிறோம் என்பதை, இதை வாசிப்பவர்கள் தங்கள் மேலான கருத்துக்களை இவண் தெரிவிக்கலாம்.